இந்தியாவிலேயே முதல் முறையாக...'எந்த சாதியும் இல்லை,மதமும் இல்லை'...சாதித்த வேலூர் பெண்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 14, 2019 11:05 AM

9 வருட போராட்டத்திற்கு பிறகு ‘சாதி-மதம் அற்றவர்’ என்று வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற்று சாதித்திருக்கிறார்,திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிநேகா.

Vellore lawyer gets no-caste-no-religion certificate

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் பார்த்திபராஜா.இவருடைய மனைவி சிநேகா,வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு தான் ''சாதி-மதம் அற்றவர்’’ என்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தாசில்தார் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கி புதிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த பெருமையை பெரும்,முதல் பெண்மணியும் முதல் மனிதரும் சிநேகா தான்.

வழக்கறிஞர் சிநேகாவின் பெற்றோர் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.அவர்களின் வழியிலேயே சிநேகாவும்,பேராசிரியர் பார்த்திபராஜாவை காதலித்துச் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.தன்னுடைய பெற்றோர் ஆனந்தகிருஷ்ணன்-மணிமொழி பெயர்களின் முதல் எழுத்துகளை ‘இனிஷியலாக’ வைத்திருக்கும் சிநேகா,சாதி-மதச் சடங்குகளை செய்யாமல் தாலி போன்ற அடையாளங்கள் இல்லாமல் அவரின் திருமணம் நடைபெற்றது.அதோடு சாதி மதம் போன்ற எந்த அடையாளங்களும் இல்லாமல் தனது 3 மகள்களையும் சிநேகா வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் 'மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு'என,நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,சிநேகாவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.மேலும் சமூக மாற்றத்திற்கான முதல் விதையினை சிநேகா விதைத்து இருக்கிறார் என,பலதரப்பிலிருந்தும் சிநேகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Tags : #CASTEISM #MAKKALNEEDHIMAIAM #KAMALHAASAN #NO CASTE NO RELIGION CERTIFICATE #VELLORE LAWYER #SNEGHA PARTHIBARAJA