'எழுத்தே இல்லாமல் ட்விட் போட முடியுமா'?...ஆச்சரியத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 01, 2018 01:39 PM
Twitter\'s Blank Tweet Becomes The Viral in world wide

ஒரு எழுத்துக் கூட இல்லாமல்,ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் போடப்பட்ட ட்விட்  ஒன்று தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

தற்போது  பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகிக்காதவர்களே இல்லை என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது.அதிலும் பெரும் அரசியல் பிரபலங்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை தங்களின் கருத்துக்களை ட்விட்டரில்,ட்விட் செய்வது என்பது,தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

 

முதலில்,ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை ட்விட் செய்ய வேண்டுமானால்,அது 140 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 280 என இருமடங்காக அதிகரித்தது.இது தங்களின் கருத்துக்களை விரிவாக ட்விட் செய்ய மிகவும் உதவியாக அமைந்தது.அதே நேரத்தில் எழுத்துகளே இல்லாமல் ட்விட் போடும் வசதி நெட்டிசன்களுக்கு அளிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் ஒரு எழுத்தாவது இருக்க வேண்டும். அப்போது தான் ட்விட் பட்டனை நம்மால் கிளிக் செய்ய முடியும்.

 

இந்நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, ஒரு எழுத்துக் கூட இல்லாமல்,ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்விட்  ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டானது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.மேலும் இதை வைத்து நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

Tags : #TWITTER