திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்க: பாஜக பிரபலம் ட்வீட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 07, 2018 02:24 PM
Steal Some Good Stories, BJP National Secretary H Raja Tweeted

தமிழ்நாட்டில் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள திரைத் துறையில் கதைத் திருட்டு என்பதும் தொன்றுதொட்டு இருந்து வருவது. சில ஆதாரமற்ற தகவல்களும் போலித் தனமான குற்றச் சாட்டுகளும் பிரபல ஹிட் படங்கள் மற்றும் பிரபலமான இயக்குனர்களின் மீது வைக்கப்படுவதும் உண்டு. 

 

இந்த நிலையில் அண்மையில் தமிழ்த் திரைத் துறையில் 96, சர்கார் உள்ளிட்ட படங்களின் மீதான குற்றச் சாட்டுகளில் தங்களது கதைகள்தான் இவை என உதவி இயக்குனர்கள் கூறியிருந்தனர். இந்த தகவல்கள் விசாரிக்கப்பட்டன.

 

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா  திருடுங்கடா” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், தனது இந்த வாக்கியத்துக்கு முன்னதாக, ‘படித்ததில் பிடித்தது’ என்கிற வார்த்தையை சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : #BJP #HRAJA #CINEMA #STORYTHEFT