மனைவியின் கண்டிப்பால் கணவரும்; வாட்ஸ் ஆப் தோழியும் தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 01, 2018 06:30 PM
Men and a Girl Gets Suicide Because of Whatsapp Talk

தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான சிவகுமார் என்பவர் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பாக லஹரி எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சில நாட்களிலேயே இருவரும் புரிதல் இல்லாமல் சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேலும் சிவகுமார் தன்னுடன் படித்த தோழியான வெண்ணிலா என்பவருடன் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் பேசி வந்ததாகத் தெரிகிறது.


சிவகுமாரின் மனைவி லஹரியோ அதிக பொசசிவ் காரணமாக சிவகுமாரிடம், ‘வாட்ஸ் ஆப்’பில் பேசுவதை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமார் தற்கொலை செய்துகொண்டார். 

 

மேலும் அதற்கு வெண்ணிலாதான் காரண என்கிற பேச்சு வந்ததால் வெண்ணிலாவும் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உண்மை நிலவரங்கள் என்ன என்பதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #TELANGANA #WHATSAPP