ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி: நூலிழையில் உயிர்பிழைத்த வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 16, 2018 10:54 AM
man saves life of an another man who tried to fall in front of train

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள போன நபரை தடுத்து பிடித்து இழுத்து காப்பாற்றியவர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு இணையவாசிகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். 

 

கிழக்காசிய - மலாய் நாடுகளின் பிராந்தியத்துக்கு உட்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் பிளாட் பாரத்தில் ரயிலுக்காக பலரும் காத்துக்கொண்டு நிற்கின்றனர். அப்போது ஒருவர் யாரும் எதிர்பாராத வகையில் சட்டென ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நிமித்தமாக ஓடி ரயில் வரும் பாதைக்குள் குதித்து விழ எத்தனிக்கிறார். 

 

ஆனால் அங்கிருந்தவர்களுள் இன்னொருவர் வெகுவேகமாக ஓடி, ரயிலில் விழப் போனவரின் பின்புறமாக இழுத்துப் பிடித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு விழுகிறார். அந்த கேப்பில் ரயில் சென்றதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாம தப்பிக்க முடிந்தது. சிசிடிவியில் பதிவான இந்த நிகழுவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Tags : #TRAINACCIDENT #TRAIN #VIRALCLIP #VIDEOS #BUZZ