விபத்துக்கு முன் நடுவானில் '26 முறை' டைவ் அடித்த 'லயன் ஏர்லைன்ஸ்'

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 28, 2018 02:40 PM
Lion Air jet was not airworthy on Flight before crash

விபத்துக்கு முன் நடுவானில் 26 முறை லயன் ஏர்லைன்ஸ் விமானம் டைவ் அடித்ததாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த அக்டோபர் 29-ம் தேதி இந்தோனேஷிய தலைநகர் ஜனார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவிலிருந்து சுமார் 169 பயணிகளுடன் கிளம்பிய லயன் ஏர் விமானம் கிளம்பிய 13 நிமிடங்களில் மாயமானது. இதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்த 169 பேரும் உயிரிழந்தனர்.

 

உலகளவில் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த விமான விபத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கண்டறியப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என்று, கருப்பு பெட்டியின் வழியாக கண்டறியப்பட்டது.தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது என்றும், இதனால் அந்த பணிகளை நிறுத்திக் கொள்வதாகவும் இந்தோனேஷியா தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவித்தது.

 

இந்த நிலையில் புறப்பட்ட 11 நிமிடத்தில் 'லயன் ஏர்லைன்ஸ்' விமானம் நடுவானில் 26 முறை டைவ் அடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நீண்ட தேடுதலுக்குப்பின் விமானத்தின் பிளாக் பாக்ஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு, அதன் முதல்கட்ட அறிக்கையை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

 

அந்த அறிக்கையில், ''விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்து விமானத்தின் மூக்குப்பகுதியை கீழ்நோக்கி இழுத்துள்ளது. விமானத்தின் கேப்டன் விமானத்தைப் பல முறை மேல்நோக்கி தூக்கிப் பறக்க முயற்சித்தும் விமானத்தின் மூக்குப்பகுதி கீழ்நோக்கியே சரிந்துள்ளது. இதனால், கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிளாக் பாக்ஸ் ஆய்வு செய்த பொறியாளர் பீட்டர் லேமே கூறுகையில், “விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு சாதனம் செயலிழந்திருக்கக் கூடும் அல்லது தானியங்கி பாதுகாப்பு சாதனத்துக்கு சென்சாரில் இருந்து தவறான தவறான தகவல் தரப்பட்டு இருக்கும். அதனால்,தான் விமானத்தின் மூக்குப் பகுதி கீழ்நோக்கி தரையை நோக்கிச் சரிந்துள்ளது. ஆனால் விமானி பலமுறை விமானத்தை மேல்நோக்கி மிக உயரமாகப் பறக்கவைக்க முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 

 

விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்து விமானத்தின் மூக்குப்பகுதியை கீழ்நோக்கி இழுத்துள்ளது. விமானத்தின் கேப்டன் விமானத்தைப் பல முறை மேல்நோக்கி தூக்கிப் பறக்க முயற்சித்தும் விமானத்தின் மூக்குப்பகுதி கீழ்நோக்கியே சரிந்துள்ளது. இதனால், கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும்,'' என தெரிவித்தார்.

Tags : #FLIGHT #LIONAIRCRASH #INDONESIA