'விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த நிலை' .. மனதை உருக்கும் சிசிடிவி காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 13, 2019 11:13 AM

ஐதராபாத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின் வயரில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 year old child death due to electrocution at hyderabad - CCTV

நேற்று மாலை ஐதராபாத்தின் நர்சிங்கி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 6 வயதான சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறான். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஓடி சென்று அங்கிருந்த மின் கம்பத்தில் கையை வைத்துள்ளான். இதில் சிறிது நேரம் சிறுவன் அசைவற்று அப்படியே நின்றுள்ளான்.

சிறுவன் அசைவற்று இருக்கும் சமயத்தில் பலரும் அந்த வழியே சிறுவனை கடந்து செல்கின்றனர். சிறுது நேரம் மின் கம்பத்தை பிடித்தவாறு அசைவின்றி இருந்த சிறுவன் அப்படியே கீழே சரிந்து விழுகிறான்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே வந்த செக்யூரிட்டி சிறுவனை தொட்ட போது அவருக்கு ஷாக் அடித்துள்ளது. பின்னர் தான் சிறுவன் கீழே இருந்த மின் வயரை மிதித்து இருந்தது தெரியவந்துள்ளது.

உடனே அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  நடத்திய விசாரணையில், சிறுவன் 4 முதல் 5 நிமிடங்கள் வரை மின் கம்பத்தை பிடித்திருந்தாகவும், அதன்பின்னரே கீழே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் மின் கம்பத்தை பிடித்திருந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் காண்போரின் மனதை கலங்க செய்துள்ளது.

Tags : #HYDERABAD #DEATH #LAMP POST #CURRENT SHOCK #CHILD