Looks like you've blocked notifications!

THENIFIREACCIDENT NEWS

கடந்த 11-ம் தேதி, குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றவர்கள் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32) என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். ஜெயஸ்ரீ-யின் மரணத்தைத் தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது.

 

இவர், சென்னையில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The death toll in the Kurangani hills forest fire has increased to 14 as another woman succumbed to burn injuries on Thursday. Anu Vidya from Chennai died at Madurai government hospital without responding to treatment. When asked, a hospital staff said her body will be taken to Chennai after post-mortem. Notably, the government on Thursday issued an order appointing IAS officer Atulya Misra to probe the forest fire incident and submit a report.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 15, 2018 6:53 PM #THENIFORESTFIRE #THENIFIREACCIDENT #DEATHTOLLRISES #TAMIL NADU NEWS

Another victim of the Kurangani forest fire succumbed to her injuries on Wednesday, raising the death toll to 12. Divya was rescued with 99% burns and was admitted to a private hospital in Madurai. Due to the severity of the burns, she succumbed to her injuries on Wednesday evening.

BY RAMYA ASHOK KUMAR | MAR 14, 2018 9:52 PM #THENIFIREACCIDENT #THENIFORESTFIRE #MADURAI #KURANGANIFORESTFIRE #TAMIL NADU NEWS

Tamil Nadu government has reportedly issued an order appointing an investigating officer to probe the Theni forest fire incident which claimed the lives of 11 people. The government, in its order, said Atulya Misra, Principal Secretary of the Department of Revenue and Disaster Management, will conduct the investigation into the matter.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 14, 2018 4:00 PM #THENIFORESTFIRE #THENIFIREACCIDENT #TAMIL NADU NEWS

A special team of police has reportedly taken a man named Prabhu from Chennimalai into custody for questioning about the Theni forest fire which claimed the lives of 11 trekkers. Based on a complaint from district forest officer Rajendran, police took the guide into custody for inquiry. The police are also questioning two local guides from Theni, reports added.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 14, 2018 3:07 PM #THENIFORESTFIRE #THENIFIREACCIDENT #TAMIL NADU NEWS

The Chennai Trekking Club, which organised the trekking of a 27-member group, has explained that the expedition was carried out by Nisha and Dhivya, who are supported by experienced organisers Vipin and Arun. They also bought the entry pass and pursued on the regular route, the Club’s Facebook post said. There was no sign of fire when they started to trek, it added. The Club also said that the local farmers, as a regular practice, burnt grass on Sunday, and due to the unexpected strong winds, the fire spread across the hill.

தேனி காட்டுத் தீயில் சிக்கி பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த குழுவின் பயணத்தை திட்டமிட்டதாகக் கூறப்படும், சென்னை ட்ரெக்கிங் கிளப் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.அதில், ”மலையேற்றத்தில் 7 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அருண், விபின் ஆகியோரையும் சேர்த்து 27 பேர் கொண்ட அணி, ஒரு உள்ளூர் வழிகாட்டியுடன் குரங்கணி வனப்பகுதிக்குள் சென்றனர்.

 

வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு, அவர்கள் மலைப்பகுதிக்கு சென்றபோது காட்டுத் தீ ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

 

குரங்கணி மலை அடிவாரத்தில், பருவகால சாகுபடிக்காக புற்களை விவசாயிகள் எரிப்பதால் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கலாம். போடி பள்ளத்தாக்கில் வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Divya from Erode, who suffered serious burn injuries in the Kurangani hills forest fire, succumbed to injuries on Tuesday. She was receiving treatment at the Madurai government hospital. Now, the death toll due to the forest fire has risen to 11. Earlier, Divya’s husband Vivek, who was also part of the trekking group, died after suffering burn injuries in the fire. The tragic death of the couple, who were married recently, has left their families shattered.

A 25-year-old techie from Chengalpet was among the dead in the forest fire at the Kurangani hills in Theni. The woman Punitha was married to a man named Balaji 44 days ago. She was working for an IT company in Kelambakkam, Chennai. In the group of 39 trekkers, the forest fire claimed the lives of 10, while many others were severely injured and are receiving treatment.

நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இழப்பீடு நிதி அறிவித்துள்ளார்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1  லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami on Monday announced solatium of Rs 4 lakh to the families of those who died in the forest fire at Kurangani hills in Theni. The people who suffered serious burn injuries in the fire will receive Rs 1 lakh, while those with mild injuries will get Rs 50,000 as compensation, the Chief Minister reportedly announced.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 12, 2018 5:58 PM #THENIFIREACCIDENT #THENIFORESTFIRE #TAMIL NADU NEWS

நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி சுமார் 9  பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிஷா என்ற பெண் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது மருத்துவமனையில் உயிரிழந்த பெண், சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா  என தெரிய வந்துள்ளது.

 

மேலும் 8 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The death toll in the forest fire that engulfed the Kurangani hills in Theni has reportedly reached to 10 as another woman named Nisha succumbed to burn injuries. Nisha from Velachery in Chennai was receiving treatment in hospital after suffering serious burn injuries in the fire. Reports suggest that around 10 people escaped unhurt from the fire. Meanwhile, health minister C Vijayabaskar told that the bodies of seven people were sent to their hometowns following a post-mortem.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 12, 2018 5:06 PM #THENIFIREACCIDENT #THENIFORESTFIRE #TAMIL NADU NEWS

Following the Theni forest fire that proved to be disastrous for the trekkers by claiming nine lives, the Kerala government has reportedly imposed a temporary ban on trekking in the reserved forests of the state. The state chief secretary also said that touring in the forest areas has been temporarily banned, reports added.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 12, 2018 3:06 PM #THENIFIREACCIDENT #THENIFORESTFIRE #TAMIL NADU NEWS

According to reports, nine people were killed and around 30 others were rescued after a fire broke out in the Kurangani hills of Theni on Sunday. Among the killed was a newly-wed man from Erode. The man Vivek married Divya a while ago when he had returned from Dubai where he was working. The couple visited the hills as Vivek is supposed to be back in Dubai in a week, say reports.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 12, 2018 2:49 PM #THENIFIREACCIDENT #TAMIL NADU NEWS

தேனி குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை  9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்துள்ள 9 பேரில், ஈரோட்டைச் சேர்ந்த புதிதாக திருமணம் ஆன விவேக்கும் ஒருவர்.

 

விவேக் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்துக்காக விடுமுறையில் வந்த விவேக்குக்கும் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யாவிற்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.

 

இந்நிலையில், தம்பதியினர் குரங்கணி மலைக்கு சென்றபோது காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். இதில், விவேக் தீயில் கருகி பலியான நிலையில், திவ்யா படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Defence Minister Nirmala Sitharaman reportedly said that it is difficult for choppers to land as the Kurangani hill is a steep one. Nine trekkers lost their lives so far in the massive fire in Theni’s Kurangani hills, 30 people were rescued. The rescued trekkers were taken to various nearby hospitals for first aid and treatment, six of them are in critical conditions.

BY AISHWARYA | MAR 12, 2018 12:15 PM #THENIFIREACCIDENT #TAMIL NADU NEWS

குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை  9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த 9 பேர்களில், 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும், காட்டுத் தீயிலிருந்து மீட்கப்பட்ட 27 பேர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என, தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

காட்டுத் தீக்கு பலியான 9 பேர்களில், 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

According to the district collector, nine trekkers lost their lives so far in the massive fire in Theni’s Kurangani hills. Out of the nine people who passed away, six are from Chennai and the other three are from Erode. According to the officials, 30 people were rescued so far. The rescued trekkers were taken to various nearby hospitals for first aid and treatment, six trekkers are in critical conditions. The Indian Air Force has sent its teams for rescue operations. When a group of 25 women and three children were out in Kurangani hills for trekking, the fire broke out on Sunday.

BY AISHWARYA | MAR 12, 2018 10:11 AM #FORESTFIRE #THENIFIREACCIDENT #TAMIL NADU NEWS

நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கியவர்களில், 27 பேர் பல்வேறு விதமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், குரங்கணி மலைப்பகுதியில் இருந்து தற்போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில், மீட்கப்பட்ட நபர் கோயம்புத்தூர் கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த விபின்(30) எனத் தெரியவந்துள்ளது.

 

தற்போது, சடலமாக மீட்கப்பட்ட விபினுடைய உடல் போடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People