‘அதிகாரி செய்த கொடூரம்’.. ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுத்த இளம் பெண்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 04, 2019 07:50 PM

இளம் பெண் ஒருவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி, கலெக்டர் ஆபீஸில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman protest by begging money to give Bribe in Kadapa District of AP

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பகத்சிங் காலனியைச் சேர்ந்த யமுனா என்பவர், தான் கஷ்டப்பட்டு ரூ.6 லட்சம் செலவு போட்டு கட்டிய வீட்டினை வருவாய்த் துறை அதிகாரி தடுத்ததாகவும், வீடு கட்டி முடிப்பதற்கு அவர் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

பின்னர், வெங்கடேஸ்வரலு என்கிற அந்த வருவாய்த்துறை அதிகாரி பற்றி தனது கிராம மக்களிடம் யமுனா புகார் அளித்ததை அடுத்து, கோபமாகியுள்ள வெங்கடேஸ்வரலு யமுனா கஷ்டப்பட்டு கட்டிய வீட்டினை இடித்துள்ளார். 

இதனால் செய்வதறியாது தவித்ததோடு, அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்கவும் முடியாமல், லஞ்சம் கேட்ட வருவாய்த்துறை அதிகாரியின் மீது  சட்ட ரீதியான புகாரை அளித்தாலும் பயனில்லை என்று நினைத்த யமுனா ஆந்திராவின் கடப்பா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வேண்டி பிச்சை எடுத்துள்ளார். 

கண்கலங்க வைக்கும் இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

Tags : #BRIBE #KADAPA #ANDHRA PRADESH