அம்பானி வீட்டின் அடுத்த விசேஷம்.. அழைப்பிதழுக்கு ஆன செலவு தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 14, 2019 04:37 PM

இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் நடந்தது இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமலின் திருமணம்.

Watch: Wedding Invite of Shloka- Akash Ambani goes viral on instagram

இந்நிலையில் இஷாவின் சகோதரர் ஆகாஷ் தனது சிறுவயது தோழியும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஷ்லோகா மேத்தாவை வரும் மார்ச் 10-ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவல்களும் இதனையொட்டி அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இளம் சிவப்பு நிறப் பேழைக்குள் பல பகுதிகளாக இருக்கும் இந்த இன்விட்டேஷனில் முகப்பில் சூரிய ஒளியில் தாமரை, நடனமாடும் மயில்கள், பசுக்கள் நடுவில் ராதையும் கிருஷ்ணரும் இருக்குமாறு படங்கள் இருக்கின்றன. அதற்கு உட்புறம் வெள்ளி ஃபிரேமில் ராதா - கிருஷ்ணனும், இன்னும் திறந்தால், ரதத்தில் வெண்ணிற விநாயகரும் காட்சி தருகின்றனர். அதன் பின்னர் கடைசியாக முகேஷ் அம்பானி - நீதா குடும்பம் தங்கள் பிள்ளையின் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கும் செய்தி இருக்கிறது.

முன்னதாக மும்பையின் பிரபல சித்தி விநாயகர் கோவிலில் வைத்து நீதா அம்பானி அழைப்பிதழை பூஜித்து விநாயகரிடம் ஆசிபெற்ற பிறகு, இந்த அழைப்பிதழ் திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியலாளர்கள், முக்கியஸ்தர்களுக்கு என கொடுக்கப்பட்டு வருகிறது.

இத்தனை அம்சங்கள் நிறைந்துள்ள இந்த அழைப்பிதழின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாயாம். நம்மூர் நடுத்தர வர்க்கத்தினரில் இருவீட்டார் செய்யும் மொத்த திருமண செலவை ஒரு அழைப்பிதழுக்கே செலவிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

Tags : #AKASHAMBANI #FIRSTLOOK #SHLOKAMEHTA #INVITATION #INSTAGRAM #VIRALVIDEOS