'கெத்தா நடந்து வரான் கேட்டையெல்லாம் கடந்து வரான்' ..'தல' தோனியின் வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 13, 2019 02:15 PM

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நாடு திரும்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MS Dhoni returned to India, video goes viral

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி தனது பேட்டிங் குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக  ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு தோனி பதிலடி கொடுத்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்று தோனி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தோனி  வெளிப்படுத்தினார். இந்த தொடரில் தோனி எடுத்த மின்னல் வேக ஸ்டெம்பிங்  இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தோனி மும்பை விமான நிலையம் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #TEAMINDIA #MSDHONI #VIRALVIDEOS