சின்னத்திரை நடிகை கொசுமருந்து குடித்து தற்கொலை முயற்சி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 20, 2018 03:43 PM
TV Serial Actress Nilani Attempts Suicide Lalithkumar murder Case

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள, ஆலப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் சின்னத்திரை நடிகை நிலானி, கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

 

முன்னதாக லலித்குமார் என்கிற காந்தியை திருமணம் செய்துகொள்ளாததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த சர்ச்சையின் பேரில் நடிகை நிலானி போலீசாரிடம் தன் தரப்பு விளக்கத்தை அறிவித்திருந்தார்.

 

பின்னர், நிலானி பற்றின வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடப்போவதாகவும்  தற்கொலை செய்துகொண்ட லலித்குமார் (எ) காந்தியின் அண்ணன்  தகவல் தெரிவித்தார். இந்த நிலையில்தான் நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலானி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Tags : #SUICIDEATTEMPT #TVACTRESSSUICIDE #NILANI #TVSERIALACTRESS #CHENNAI