"அப்பாக்கு நெயில் பாலிஷ் போடனும்"...தி ராக்கின் நெகிழ்ச்சியான பதிவு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 01, 2018 08:23 PM
The Rock Dwayne Johnson shares his daughter picture painting his nails

ஹாலிவுட் நடிகரும்,முன்னாள்  WWE சூப்பர் ஸ்டாருமான  தி ராக் தன் மகள் தனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடும் நெகிழ்வான ஒரு போஸ்டை  தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

ஹாலிவுடில் தற்போது கொடிக்கட்டி பறப்பவர் தி ராக்.அவரது படங்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.46 வயதிலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாது அதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

 

ராக் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது  குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவழிப்பதை தவறுவதில்லை. தன் தாய், தந்தையின் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார் ராக்.கடந்த சில வருடங்களாக அவரது தந்தை மூட்டு வலி பிரச்னை காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் அவர் கஷ்டமில்லாமல் பயணிக்க அவருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்தார். அதே போல் தனக்கு பல வருடங்களாக ஸ்டண்ட் டபுளாக இருக்கும் தன் சகோதரருக்கும் விலையுயர்ந்த டிரக் ஒன்றை பரிசளித்தார். இவ்வாறு  ராக், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை தன் ரசிகர்களுக்கு பல வழிகளில் உணர்த்தி வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை நெகிழ்வடையச் செய்துள்ளது.அவரது பதிவில் தான் அவசரமாக படப்பிடிப்புக்கு கிளம்பிக்கொண்டிருந்ததாகவும், அப்போது தன் மகளிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது அவர் தன் கையை பிடித்து இழுத்து "அப்பா உன் விரல்களுக்கு நெயில் பாலிஷ் போடவேண்டும்" என்று தன்னை அழைத்ததாக ராக் பதிவிட்டுள்ளார். மேலும் ``தன் அம்மாவின் நீல நிறக் கண்களுடன் அவள் அப்படி கேட்டபோது என்னால் மறுக்கமுடியவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : #INSTAGRAM #THE ROCK DWAYNE JOHNSON #WWE