All
Looks like you've blocked notifications!

கடந்த ஒருவார காலமாக, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில்  சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் 100 குழந்தைகள் உட்பட இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

 

இந்த கொடூரமான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இந்த நிலையில், சிரியாவில் தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் செய்யப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக, ரஷிய அதிபர் புதின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 27, 2018 1:34 PM #RUSSIA #SYRIASTRIKE #சிரியாதாக்குதல் #ரஷியா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People