‘என்னோட இன்ஸ்பிரேஷனே நீங்க தான்’..இந்திய அதிரடி பேட்ஸ்மேனை புகழ்ந்த ‘பேபி சிட்டர்’!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 14, 2019 12:22 PM

பேபி சிட்டர் மற்றும் பேட்டிங் இந்த இரண்டிலும் நீங்க தான் என்னோட இன்ஸ்பிரேஷன் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சேவாக் குறித்து இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

Sehwag is my inspiration in cricket and babysitting,Says Rishabh Pant

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா விளையாடியது. அதில் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய இளம் வீரரான ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், தோனி அணிக்கு திரும்புவதைக் குறிப்பிட்டு, ரிஷப் பண்ட்டை சீண்டும் வகையில் பேசினார்.

அது, ‘நீங்கள் என் குழந்தையை கவனித்துக் கொண்டால் நான் என் மனைவியுடன் சினிமாவுக்கு சென்று வருவேன்’ என ரிஷப் பண்ட்டை கேளி செய்யும் விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் வீட்டுக்கு சென்று அவரது குழந்தைகளை சந்தித்தார். மேலும் ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி, ரிஷப் பண்ட் தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘சிறந்த பேபி சிட்டர் ரிஷப் பண்ட்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவுள்ள ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ‘பேபி சிட்டர்’ என்கிற விஷயத்தை வைத்து விளம்பரப் படம் ஒன்றை எடுத்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் நடித்திருந்தார்.

இதனை குறிப்பிட்டு ரிஷப் பண்ட தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ‘எப்படி சிறந்த கிரிக்கெட் விளையாட வேண்டும், எப்படி சிறந்த பேபி சிட்டராக இருக்க வேண்டும் என்பதற்கு நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் வீரு பாஜி’ என சேவாக் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ரிஷப் பண்ட் பதிவிட்டிருந்தார்.

Tags : #INDVAUS #TEAMINDIA #RISHABHPANT #VIRENDERSEHWAG #BABYSITTER