தென்னிந்திய சினிமா+ இந்தியா ட்ரெண்டிங் இரண்டிலுமே நம்பர் 1

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 05, 2018 11:02 AM
Sarkar top the most influential Hashtag on Twitter in India

2018-ம் ஆண்டு முடிய இன்னும் 1 மாதமே உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் அதிக ஆதிக்கம் செலுத்திய ஹேஷ்டேக்குகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதில் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் 7 இடங்களைப் பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா. முதலிடம் சர்காருக்கு. 1.சர்கார் #Sarkar, 2.விஸ்வாசம் #Viswasam, 3.பரத் அனே நேனு #BharatAneNenu,  4.அரவிந்த சமேதா #AravindhaSametha 5.ரங்கஸ்தலம் #Rangasthalam 6.காலா #Kaala என இந்த ட்ரெண்ட் நீள்கிறது.

 

இதேபோல ட்விட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்கள் பட்டியலிலும் சர்கார் ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை #MeToo #KarnatakaElections, #KeralaFloods, #Aadhaar, #JusticeforAsifa, #DeepVeer, #IPL2018, #WhistlePodu  #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேக்குகள் பிடித்துள்ளன.

 

தென்னிந்திய சினிமா+ இந்தியா ட்ரெண்டிங் இரண்டிலுமே நம்பர் 1 இடத்தை சர்கார் பிடித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

Tags : #VIJAY #TWITTER #SARKAR