'வெளியானது 100 ரூபாய் நாணயம்'...பிரதமர் மோடி வெளியிட்டார்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 24, 2018 01:15 PM
PM Modi releases Rs 100 commemorative coin in memory of Vajpayee

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த ரு.100 நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி,அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை,பிரதமர் மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நாட்டின் சிறந்த நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் பாஜக முன்னணி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த நாணயமானது வெளியிடப்பட்டது.

 

பிரதமர் வெளியிட்ட இந்த ரூ. 100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags : #NARENDRAMODI #ATAL BIHARI VAJPAYEE #RS 100 COMMEMORATIVE COIN