பிளே ஃஆப்க்கு செல்ல முடியவில்லை... தலைமைப்பயிற்சியாளர் வெட்டோரியை அதிரடியாக நீக்கிய ஆர்சிபி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 31, 2018 11:18 AM
Gary Kirsten replaces Daniel Vettori as RCB coach

பெங்களூர் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து, டேனியல் வெட்டோரியை அதிரடியாக ஆர்சிபி நிர்வாகம் நீக்கியுள்ளது.

 

நான்கு வருடங்கள் வீரர்,நான்கு வருடங்கள் தலைமைப்பயிற்சியாளர் என, மொத்தம் 8 வருடங்கள் பெங்களூர் அணியுடன் உறவில் இருந்த வெட்டோரியின் பயணம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

 

தற்போது பெங்களூர் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக கேரி ஃகிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு வெட்டோரி தலைமையில் பேட்டிங் பயிற்சி அளித்தேன். என்னால் முடிந்த அளவு சிறப்பான பணியை அணிக்கு வழங்குவேன். அணி நிர்வாகத்துக்கு நன்றி. இனி வரும் ஆண்டுகள் சிறப்பாக அமையும்,'' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

 

சிறப்பான பல வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணியால் இந்த ஆண்டு பிளே ஃஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்பதே இந்த அதிரடி நீக்கத்துக்கு காரணம் என தகவல்கள்என கூறப்படுகிறது.