அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி.. நிலவரம் என்ன?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 27, 2018 11:50 AM
DMK President MK Stalin admitted to Apollo

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி  பதவியேற்றார்.  இந்நிலையில் அவர் நேற்று இரவு   அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

மேலும் மு.க.ஸ்டாலினின் வலது தொடையில் இருக்கும் கட்டி ஒன்றை நீக்குவதற்காக அவருக்கு சிறிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக, அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று மதியம் அவர் வீடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.