நிகழும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 30, 2018 10:39 AM
DMK is not participating in MGR centenary event,MK Stalin

தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் இன்று நிகழ்கிறது. இவ்விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரையும் அழைக்கும் விதமாக விழா அழைப்பிதழில் மேற்கண்ட அனைவரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.


இதற்கு கருத்து கூறிய மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக மூத்த தலைவர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் நட்பை அரசியலாக்காமல் எம்ஜிஆர் புகழ்பாடும் விழாவாக நூற்றாண்டைக் கொண்டாடுங்கள் என்றும் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டதுதான் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரது நட்பும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் இந்த விழா அரசியல் லாப நோக்கங்களுக்காக நடைபெறுவதால் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் முன்னதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

Tags : #MKSTALIN #DMK #AIADMK #EDAPPADIKPALANISWAMI #MGR #MGR CENTENARY EVENT