'நா ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா'.. பாட்ஷா ஸ்டைலில் ஆட்டோ ஓட்டும் CM!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 03, 2019 02:54 PM

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காக்கிச் சட்டை அணிந்தபடி ஆட்டோ ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

AP CM ChandrababuNaidu drove Auto, delivered punchy dialogues

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, ஆட்டோ மற்றும் டிராக்டர்களுக்கான ஆயுள் கால வரியை நீக்கி, உத்தரவிட்டார்.

இதனைக் கொண்டாடும் விதமாகவும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆந்திராவில் உள்ள அமராவதியில் நடந்த இந்த விழாவை முன்னிட்டு அங்கு வருகை தந்த சந்திரபாபு நாயுடு உழைக்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் காக்கி சட்டை அணிந்தபடி ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #ANDHRAPRADESH #AMARAVATI #CHANDRABABUNAIDU