"பாகிஸ்தானும் வேண்டாம்...இந்தியாவும் வேண்டாம்"...பரபரப்பை கிளப்பி இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 14, 2018 05:00 PM
Afridi says Pakistan Can\'t Even Manage 4 Provinces On Kashmir issuse

4 மாகாணங்களையே நிர்வகிக்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தானுக்கு,காஷ்மீர் எதற்கு என்று கடுமையாக சாடியுள்ளார் அதிரடி வீரர்  சாகித் அப்ரிடி.

 

கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர் அப்ரிடி.அதேபோல் அவ்வப்போது அவர் தெரிவிக்கும் அதிரடி கருத்துக்களும் பரபரப்பை ஏற்படுத்தும்.இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தற்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

லண்டனில் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசிய அவர், காஷ்மீரில் மக்கள் மடிவதைப் பார்ப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.ஏற்கெனவே இருக்கும் 4 மாகாணங்களைக் கூட  பாகிஸ்தானால் கையாள முடியவில்லை.இந்நிலையில்  காஷ்மீர் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதேநேரத்தில் இந்தியாவிடமும் காஷ்மீரைக் கொடுக்க வேண்டாம்  என்று குறிப்பிட்ட அவர்,காஷ்மீரை தனி நாடாக்கி விடுவதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை ஆதரித்தும்,எதிர்த்தும் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #JAMMUANDKASHMIR #PAKISTAN #SHAHID AFRIDI #4 PROVINCES