கார்த்தியின் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள தேவ் படத்தின் மேக்கிங் வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள படம் தேவ். இருவேறுபட்ட மனநிலையில் உள்ளவர்கள் காதலித்தால் என்ன ஆகும் என்பதே இந்த படத்தின் கதை என இசை வெளியீட்டுவிழாவில் கார்த்தி தெரிவித்திருந்தார்.

Karthi's Dev Making Video released

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதனை ஆர்.ஜே.விக்னேஷ் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் தொகுத்து வழங்குகிறார்.

கார்த்தியின் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள தேவ் படத்தின் மேக்கிங் வீடியோ VIDEO