"25 வயசுல ரூ.500 கூட அக்கவுண்டில இல்ல; ஆனா இப்போ..... "- நெகிழும் விஜய் தேவரகொண்டா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை 6வது முறையாக 2019ம் ஆண்டுக்கான, 30 வயதுக்குள் சாதித்த சிறந்த 30 இளம் சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Vijay Deverakonda reacted to Forbes India 30 Under 30, He did not have even Rs 500 in the bank at 25

இதில் சவுத் சென்சேஷன் நாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளார். ‘ரவுடி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டா, டோலிவுட், கோலிவுட், பாலிவுட் வரை ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறியப்பட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தமிழ் ரசிகர்களுக்காக ‘நோட்டா’ என்ற நேரடி தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 இளம் சாதனையாளரகள் பட்டியலில் இடம் பிடித்தது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘25 வயதில் ஆந்திரா வங்கில குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ.500 இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆகிடும். அதனால 30 வயசுக்குள்ள செட்டிலாகிடுனு அப்பா சொல்லுவார். அப்பா-அம்மா நல்லா ஆரோக்யமா இருக்கப்போவே இதெல்லாம் செஞ்சாதான் பின்னாடி சந்தோஷமா இருக்க முடியும்னு சொன்னார். 4 வருஷம் கழிச்சு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் 30 அண்டர் 30ல இருக்கேன்' என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.