இத யாரு கண்டுபிடிச்சது..? அம்மா ஹாப்பி ப்ரோ-வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சிறுவயது வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் ‘நோட்டா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது பாலிவுட்டிலும் விஜய் தேரவகொண்டா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Vijay Deverakonda's childhood trends so much which is shared by his fans

இந்நிலையில், ரவுடி ரசிகர் ஒருவர், விஜய் தேவரகொண்டாவின் சிறு வயது வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த விஜய் தேவரகொண்டா, தனது சிறு வயது புகைப்படமும் ட்ரெண்டாகுது. அந்த சிறுவனும் இப்போது ஒரு ஸ்டார். நானே திரும்ப திரும்ப இந்த வீடியோவை பார்க்கிறேன். இதை யாரு கண்டுபிடிச்சிங்களோ தெரியல, என் அம்மா, நான் உட்பட எல்லோரும் ஹாப்பி’ என ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து மற்றொரு ரசிகர், அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா பேசும் வசனத்தில் அவரது சிறு வயது குரலை எடிட் செய்து பகிர்ந்த வீடியோவும் தனக்கு பிடித்திருப்பதாக விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.