தனுஷ் - வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இந்த பிரபல ஹீரோயின்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்த வருடம் வெளியான வட சென்னை திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

Manju warrier will be playing female lead in Dhanush - Vetrimaaran's asuran

இந்நிலையில் வட சென்னை இரண்டாம் பாகத்துக்கு முன்னதாக தனுஷுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக வெற்றிமாறன் அறிவித்தார்.

அசுரன் எனப் பெயரிடப்பட்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மஞ்சுவாரியர் அசுரனில் முக்கியமான வேடத்தி்ல் நடிக்கவிருக்கிறார்.இத்தகைய திறமையான நடிகையுடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  

தனுஷின் மாரி 2 படத்திலும் வில்லனாக பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.