ஃபோர்ப்ஸ் 30U30 - பட்டியலில் இடம்பிடித்த ஒரே சவுத் சென்சேஷன் நாயகன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சர்வதேச வர்த்தக பத்திரிகைகளில் ஒன்றாக ஃபோர்ப்ஸ், 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Actor Vijay Deverakonda listed in Forbes 30 Under 30 list

2019ம் ஆண்டுக்கான சிறந்த 30 இளம் சாதனையாளர்கள் பட்டியலில் சவுத் சென்சேஷன் நாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளார்.

தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறியப்பட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து ‘மகாநடி’, ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வித சினிமா பின்னணியும் இன்றி விஜய் தேவரகொண்டா இந்த இடத்தை பிடித்ததற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.