சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துக்கு பிறகு இதில் நடிக்கும் சசிக்குமார்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சசிக்குமார் இணைந்து நடித்த பேட்ட திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள நாடோடிகள் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Actor Director Sasikumar's Next with Nikki galrani

இந்நிலையில் சசிக்குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செந்தூர் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தை சுந்தர்.சியின் உதவியாளர் கதிர் இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.  நடிகர் சதிஷ் ஒரு முக்கியமான வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். சாம் சி.எஸ் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.