ஹலோ ஹாலிவுட்டா ? ரெண்டு ஆஸ்கர் பார்சல் பண்ணுங்க

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சமூகத்தில் நிலவும் சாதி ரீதியான கொடுமைகளை அப்பட்டமாக பேசிய படம் பரியேறும் பெருமாள்.  நீலம் புரொடக்ஷன் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த இந்த படம் கடந்த  வருடம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

Santhosh narayanan Praises Pariyerum Perumal Director Mari selvaraj

கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை புதுமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணின் இசையும் ஒரு முக்கிய பலமாக அமைந்தது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் இயக்கம் சார்பில் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், பிப்ரவரி 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் தமிழர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் புகைப்படம் பகிர்ந்த சந்தோஷ் நாராயணன்,  ஹலோ ஹாலிவுட்டா ? ஒரு 2 ஆஸ்கர் பார்சல் பண்ணுங்க . மாரி செல்வராஜின் கலைக்கு மரியாதை செய்த தமிழ் இயக்கத்துக்கு நன்றி.  நீங்களும்  தனுஷும் இணையும் படத்துக்கு காத்திருக்கிறேன். என்றார்.