ஜிப்ஸிக்காக சந்தோஷ் நாராயணன் பாடிய வெரி வெரி பேட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

குக்கூ, ஜோக்கர் படங்களுக்கு பிறகு ராஜூமுருகன் இயக்கிவரும் படம் ஜிப்ஸி. பயணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார்.

Jiiva and Rajumurugan's Gypsy song which is sung by santhosh narayanan

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து வெரி வெரி பேட் என்ற பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியானது. பாடலில் சமூக செயற்பாட்டாளர்கள் நல்லகண்ணு, திருமுருகன் காந்தி, பியூஸ் மனுஷ் , பாலபாரதி கிரேஷ் பானு உள்ளிட்டோர் இந்த பாடலில் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த பாடலை சந்தோஷ் நாராயணனே தோன்றுகிறார்.   தற்போது முழுமையான பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.

ஜிப்ஸிக்காக சந்தோஷ் நாராயணன் பாடிய வெரி வெரி பேட் VIDEO