இயக்குநர் என்னை 'உள்ளே' வைக்க பார்க்கிறார்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

குக்கூ, ஜோக்கர் படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜூமுருகன் இயக்கியிருக்கும் படம்  ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Yugabharathi's speech in rajumurugan's Gypsy very very bad song release function

இந்த படத்தில் இருந்து நேற்று வெரி வெரி பேட் என்ற பாடல் வெளியானது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இந்த பாடலின் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜூ முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை உள்ளே வைக்க வேண்டும் என முயற்சிக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். அது இந்த படத்தில் நடக்கிறதா இல்லை அடுத்த படத்தில் நடக்கிறதா என தெரியவில்லை.

இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். என்றார்.

பின்னர் நாயகன் ஜீவா பேசுகையில், ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார்.

அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது.கதையில் ஒரு உண்மை இருந்தது.