சிவகார்த்திகேயன் படத்துக்கு மிஸ்டர் லோக்கல் தான் பொருந்தும்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். அவரது படங்களின் தலைப்புகள் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, சீமராஜா என்ற வித்தியாசாமானதாக அமைந்து அந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும்.

Rajesh M shares his experience with Sivakarthikeyan in Mr.Local

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்துக்கு மிஸ்டர் லோக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்துக்கு மிஸ்டர் லோக்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது குறித்தும் இயக்குநர் ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.  அதில்,

" இந்த படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு "மிஸ்டர் லோக்கல்" என்கிற தலைப்பு தான் பொருத்தும்  என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும்.  எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில் தரும் சக்தி மிகவும் postive ஆனது. அவரது  இதை பார்க்கும் போது,  ஒரு இயக்குநராக அவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆசை தூண்டப்படுகிறது.

கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிக பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில் நுட்ப கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவும் அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது.

"மிஸ்டர் லோக்கல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.  போஸ்ட்  புரொடக்ஷன் பணிகளும் நடைப்பெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு "மிஸ்டர் லோக்கல்" திரைக்கு வர ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடைப்  பெற்றுக் கொண்டிருக்கிறது" என்கிறார்