இரும்புத்திரை இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட இன்றைய சூழலில் அதிலிருக்கும் ஆபத்துகள் பற்றி திகிலூட்டும் வகையில் பேசிய படம் இரும்புத்திரை.  

Casting call announcement from Irumbuthirai director Mithran - Sivakarthikeyan film

குறிப்பாக இணைய உலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் என்றே அதனை சொல்லலாம். விஷாலிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

நடிகர் அர்ஜூன் இந்த படத்தில் மிரட்டலான வில்லனாக தோன்றி கலங்கடித்திருப்பார். இந்த படத்தின் இயக்குநர் மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகவும், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டன. இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

தற்போது இதனை 24 ஏஎம்  ஸ்டுடியோஸ் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

எஸ்கே 15 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் படத்திற்கு நடிக்க ஆர்வமுடைய கீழ்க்கண்ட தகுதியுடைய நபர்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் யுவன், இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். சி.வில்லியம்ஸ் ஆகியோர் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.