கமலுக்கு மட்டும் தான் ஹிட் பாடல்- இளையராஜா விழாவில் ரஜினி கலகல பேச்சு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘இளையராஜா 75’ விழாவில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், இளையராஜா குறித்து பேசுகையில் கமல்ஹாசனுக்கு மட்டும் தான் இளையராஜா ஹிட் பாடல்கள் கொடுத்தார் என கலகலப்பாக பேசினார்.

Ilaiyaraja gave hit songs to Kamal Hassan, Rajini on Ilaiyaraja 75 event

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை தான். அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருக்கும்.

சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும்,  இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர். அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.

அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார்னு தான் கூப்பிடுவேன், திடீர்னு ஒருநாள் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார், அந்த நிமிஷத்தில் இருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார்.

மன்னன் படத்தில் என்னை பாட வச்சார், எனக்கு நிறைய  பாடல் போட்டிருக்கார். ஆனால், என்னை விட கமலுக்கு தான் நிறைய ஹிட் பாடல் கொடுத்திருக்கார் என ரஜினி சொன்னதும், குறுக்கிட்ட இளையராஜா, இவர் இப்படி சொல்றார். அவர கேட்டா, ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என்றார் இளையராஜா. அதன் பிறகு மேடைக்கு வந்த கமல்ஹாசனும் அதை அமோதிப்பது போல சொன்னார்.