இளையராஜாவை வைத்து விரைவில் ஒரு இசை சம்பவம் - பார்த்திபன் சூசகம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் எது செய்தாலும் தன் வித்தியாசமான அணுகுமுறையால் பார்வையாளர்களை ஈர்ப்பதில் வல்லவர். விழாக்களில் அவர் பேசுவதை கேட்பதற்கும், வித்தியாசமான முறையில் அவர் அளிக்கும் பரிசுகளை காண்பதற்கும் ஒரு பெருங்கூட்டம் காத்துக்கிடக்கும்.

Parthiban shares his thought in Facebook Ilaiyaraaja 75

சமீபத்தில் நடைபெற்ற இளையராஜா 75 என்ற பெயரில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் பங்கேற்று தனது பாணியில் அசத்துவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது தமிழ்நாடுத் திரைப்பட  தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி அளித்தார்.

மேலும் இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ராஜா சாரை அதிகம் நேசித்தவர்கள் பெருங்கூட்டமாக அங்கு இசைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

மிகவும் அதிமாக நேசிக்கும் நான் தனிமையில் அசைப் போட்டுக்கொண்டிருந்தேன், அவர் மீதான பிரியங்களையும், நிகழ்விலிருந்து பிரிய நேர்ந்த சம்பங்களையும்.  விரைவில் அவரை வைத்து ஒரு சம்பவம் நடத்த உள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.