எங்களுக்கு இருக்கும் ஓரே கெட்ட பழக்கம் இது தான்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக இளையராஜா 75 என்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

A.R.Rahman praises Ilaiyaraaja for his good character

விழாவில் கலந்து கொண்டு பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்,  என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன்.

எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி என்றார்.