சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கலில் அறிமுகமாகும் இந்த யூடியூப் பிரபலம் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிவகார்த்திகயேன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ErumaSaani fame Harija will be seen playing Siva Karthikeyan's sister in MrLocal

ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரிஜா இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.