இதற்காக அவருக்கு பீர் வாங்கித் தருவேன் - பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

குறும்பட இயக்குநராக இருந்து 'பீட்சா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'ஜிகர்தண்டா' மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

Petta Director Karthik Subbaraj sharesh his cinema journey to Behindwoods Tv

இயல்பிலேயே சூப்பர் ரஜினிகாந்த் ரசிகரான அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'பேட்ட' என்ற பெயரில் அவர் இயக்கிய அந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜின் வாழ்க்கை, அவரது கடந்த வந்த பாதை ஆகியவை குறித்து அவரது அப்பாவும் நடிகருமான கஜராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆகியோர் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தனர்.

அப்போது கார்த்திக் சுப்பராஜிடம், பார்த்துட்டு இருந்த வேலைய விட்டுட்டு படம் இயக்க போறேன்னு சொல்லியிருந்திங்க. அந்த கார்த்திக் சுப்புராஜ திரும்ப உங்க காலத்துக்கு போய் பார்த்தா என்ன சொல்லுவீங்க என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், ரொம்ப கரெக்டான முடிவெடுத்த வாடானு ஒரு பீர் வாங்கித் தருவேன் என்றார்.

இதற்காக அவருக்கு பீர் வாங்கித் தருவேன் - பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் VIDEO