சென்னை பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான ‘பேட்ட’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Chennai Box Office report- Superstar Rajinikanth's Petta will be Block Buster

சன் பிக்சர்ஸ் தயார்ரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ரிலீசாகி தொடர்ந்து 3 வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரப்படி, 3 வாரங்களில் ரூ.14.04 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. விரைவில் இப்படம் பிளாக் பஸ்டராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Behindwoods பாக்ஸ் ஆபீஸ் ஆய்வுக்குழுவின் கணக்குப்படி, தற்போது வரை வார இறுதிநாட்களில் மட்டும் ‘பேட்ட’ திரைப்படம் சுமார் 225 காட்சிகள் திரையடப்படுகின்றன.  இவை அனைத்தும் தோராயமாக கணிக்கப்பட்ட வசூல் நிலவரமாகும். இதே நிலை நீடித்தால் ‘பேட்ட’ திரைப்படத்தின் வசூல் வார நாட்களிலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.