ரஜினிகாந்த் வீட்டில் கெட்டிமேளம்..! தொழிலதிபரை மணக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya Rajinikanth to get married to a Actor-businessman

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், திருமணத்திற்கு தயாராகியுள்ள சவுந்தர்யா, ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்த விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

தொழிலதிபரான விசாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் வரும் பிப்.11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ரஜினிகாந்த் வீட்டில் திருமண வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. திருமண கொண்டாட்டங்கள் வரும் பிப்.9ம் தேதி முதல் பிப்.11ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.