பேட்ட படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்த இந்த பிரபலம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Anirudh revealed he has watched petta100th time

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் 90களின் ரஜினிகாந்தை திரும்ப பார்க்க முடிந்ததாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அனிருத்தின் இசையும் திருவின் ஒளிப்பதிவும் இந்த படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்ட திரைப்படம் உலக அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பேட்ட திரைப்படத்தை எத்தனை முறை எப்படி பார்த்தீர்கள் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு ரசிகர்கள் தங்களது பதிலை தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் பேட்ட திரைப்படத்தை தான் 3 முறை பார்த்ததாக தெரிவித்தார்.

பின்னணி இசையமைகக்க தொடங்கியதில் இருந்து தற்போது கிட்டதட்ட 100 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். என்றார்.