‘தலைவர்166’மாஸ் படம்: ரஜினி படம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘சர்கார்’ படத்தின் வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

A.R.Murugadoss opens up about Rajinikanth's Film for the first time

இந்நிலையில், Behindwoods Gold medals விருது விழாவில் சிறந்த சமூக பொறுப்புணர்வுள்ள இயக்குநர் என்ற பிரிவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், இன்றைய சூழலில் இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பது அவசியம் என்றார். 

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையவிருக்கும் புதுப்படம் குறித்த சில தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார். ரஜினி ரசிகன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றும் திரைப்படம் எனது கனவுப்படமாக இருக்கும். இது அரசியல் படமா என்ற கேள்விக்கு, இது மாஸ் படமாக இருக்கும் என்று ரஜினி ரசிகராக பதிலளித்தார்.

இப்படத்தின் பணிகள் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், இப்போதைக்கு படம் குறித்த சுவாரஸ்யங்களை தெரிவிக்க முடியாது என்றும் முருகதாஸ் தெரிவித்தார்.

‘தலைவர்166’மாஸ் படம்: ரஜினி படம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ் VIDEO