பாய்ஸ் 2 பற்றி பேசிய சித்தார்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ்.5 டீன் ஏஜ் இளைஞர்களை வாழ்வியலை பேசிய படம் பாய்ஸ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

Siddhardh answers about boys 2 for Thaman tweet

இந்த படத்தில் புதுமுக நடிகர்களாக சித்தார்த், பரத், நகுல், ஜெனிலியா, தமன், மணிகண்டன் உள்ளிட்டோர் அறிமுகமாகியிருந்தனர்அப்போதைய இளைஞர்களை இந்த படம் வெகுவாக கவர்ந்தது.

தற்போது ஷங்கர் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது இந்தியன் 2 படத்தை கையிலெடுத்துள்ளார். மேலும் முதல்வன் 2 குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பாய்ஸ் 2 என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்தார்த் கொளுத்திப் போடு என பதிவிட்டு குட் பாய்ஸ் எப்பவுமே குட் பாய்ஸ் தான் என தெரிவித்திருந்தார்.