Petta USA All Banner

இந்தியன் படத்துக்கு முடிவான முதல் ஹீரோ யார் தெரியுமா ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல், மனிஷா கொய்ராலா, கவுண்டமனி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். 

RajiniKanth is the first choice for Shankar's Indian

மேலும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் தீமைகளை பேசிய இந்த படத்தை  ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். இந்த படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் கமல் அசத்தியிருந்தார்.

குறிப்பாக அந்த முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரராகவும், இந்நாளில் ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடுபவராகவும் இருவேறு பரிணாமங்களில் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்நிலையில் இந்தியன் முதல் பாகத்தில் இயக்குநர் ஷங்கரிடம் இருந்த இயக்குநர் வசந்த பாலன் இந்தியன் படத்தின் அனுபவங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அதில், ஜென்டில்மேன் படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஷங்கரை கதை கேட்டதாகவும், அதற்கு அவர் பெரிய மனிதர் என்ற கதையை அவரிடம் ஷங்கர் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த நேரத்தில் ரஜினிகாந்தின் தேதிகள் கிடைக்காததால் கமலை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த படம் தான் இந்தியன் எனவும் தெரிவித்திருந்தார். அந்த படம் தான் இந்தியன் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, "நேற்று இணையத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.இந்தியன் தாத்தாவின் கத்திக்கு இரையாக ஊழலும் லஞ்சமும்,வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. என் குருவிற்கு வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் இந்தியன் 1 திரைப்படம் துவங்கிய தருணம்  ப்ளாஷ்பேக். ப்ளாஷ்பேக்குன்னு சொன்னவுடனே ,வேறு தளத்திற்கு தாவிவிடாதீர்கள்.கொஞ்சம் வெயிட்.sweet memories

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மும்மொழி வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஷங்கர் சாரை அழைத்தார். 1994ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.காதலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஏதாவது கதையிருக்கா ஷங்கர் என்று ரஜினி சார் கேட்க பெரிய மனுஷன் என்ற தலைப்பில் ரஜினி சாருக்கான கதையை ஷங்கர் சார் உருவாக்கினார். உடனே அவரிடம் சொல்லப்பட்டது.அவர் மிக வியந்து பாராட்டினார்.

காதலன் திரைப்படம் முடியும் தருவாயில் ரஜினி சாரின் பல படங்களின் கால்ஷீட் தேதிகள் இடிக்க , உடனே படம் செய்ய முடியாமல் போனது. காதலன் திரைப்படத்திற்குப் பிறகு ஷங்கர் சார் பெரிய மனுஷன் கதையை தான் பண்ண வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.கதையில் கதாநாயனுக்கு தந்தை மகன் என்ற இரு வேடங்கள். ஆகவே ரஜினி சாருக்கு அடுத்து கமல் சாருக்கு அந்த கதை சொல்லப்பட்டது.பல்வேறு சந்திப்புகள் நிகழ்ந்தன.ஒருவேளை கமல் சார் நடிக்க மறுத்தால் என்ன செய்வது என்று எண்ணி பிளான் பி தயாரானது.

தெலுங்கு கதாநாயகர்கள் நாகார்ஜீனா அல்லது வெங்கடேஷ் அவர்களை மகனாக நடிக்க வைக்கலாம்.டாக்டர் ராஜசேகர் அவர்களை தாத்தா வேடத்தில் நடிக்க வைக்கலாம்.தெலுங்கு படமாக மாறிடுமே என்று கவலைப்பட்டோம்.ஷங்கர் சாருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்ற சமாதான பேச்சும் உலா வந்தது.நமக்கு தெலுங்கு தெரியாது நம்மை கழட்டிவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு.

கடவுளே எப்படியாவது கமல் சார் ஓகே சொல்லிவிடவேண்டும் என்று டைரக்டர்ஸ் காலனியில் உள்ள விநாயகரை வேண்டிக்கொண்டேன்.நடிகர் கார்த்திக் அவர்களை வைத்து துவங்கலாம் சத்யராஜ் அவர்களை தாத்தா கேரக்டர் என்று பலவிதமான யோசனைகளை நானும் இணை இயக்குநர்களும் வாரி வழங்கினோம்.ஒரு வழியாக கமல் சார் நடிப்பது முடிவானது.விநாயகர் கருணையால் நடந்தது என்று நான் நம்பி வெடலைத் தேங்காய் போட்டேன்.

இந்தியன் என்கிற டைட்டிலுக்கு முன் என்னென்ன டைட்டில்கள் விவாதிக்கப்பட்டன. இன்னொரு பதிவில் பார்க்கலாம்." என்றார்.