இது மீம் இல்ல.. என் மைண்ட் வாய்ஸ்- விஜய்யின் மீம்-க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அசத்தல் பதில்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘சர்கார்’ படத்தின் வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

Rajinikanth Meme for Vijay-A.R.Murugadoss mass reply in Behindwoods Gold medals

இந்நிலையில், Behindwoods Gold medals விருது விழாவில் சிறந்த சமூக பொறுப்புணர்வுள்ள இயக்குநர் என்ற பிரிவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், இன்றைய சூழலில் இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பது அவசியம் என்றார். 

மேலும், ரசிகர்களின் ஆராவாரத்திற்கு பதிலளிக்கும் விதமாக ‘துப்பாக்கி 2’ கட்டாயம் வரும் என்றும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அவருக்காக உருவாக்கப்பட்ட மீம் போட்டுக் காட்டப்பட்டது. அதில் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை போல் விஜய் பற்றிய மீம் உருவாக்கப்பட்டிருந்தது.

‘விஜய் சார் கூட படம் பண்றது தான் உனக்கு பிரச்னைனா.. இன்னும் 10 படம் கூட பண்ணுவேன் டா.. ஸ்டைலா .. கெத்தா..’என்ற மீமை பார்த்ததும், இது மீம் இல்ல என் மைண்ட் வாய்ஸ் என இயக்குநர் முருகதாஸ் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறினார்.

பின்னர், சர்ப்ரைஸ் எலிமெண்ட்டாக பறை இசைத்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

இது மீம் இல்ல.. என் மைண்ட் வாய்ஸ்- விஜய்யின் மீம்-க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அசத்தல் பதில் VIDEO