தளபதி 63யின் பூஜை வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க விருக்கிறார்.

Thalapathy vijay and Atlee's Thalapathy 63 Pooja video release by AGS Entertainment

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். மெர்சல் மற்றும் சர்கார் படங்களைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு  இசையமைக்கிறார்.

மேலும், பரியேறும் பெருமாள் படம் மூலம் பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகர் கதிர் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், டேனியல் பாலாஜி, யோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

விழாவின் போது நடிகர் விஜய், இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் விளக்கு ஏற்றினர். இன்னும் இந்த படத்துக்கு பெயரிடப்படாததால் தளபதி 63 என்றே அழைக்கப்படுகிறது.

தளபதி 63யின் பூஜை வீடியோ இதோ VIDEO