விஸ்வாசம் ரூ.125 கோடி வசூலுக்கு காரணம் இது தான்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விஸ்வாசம். சிவா இயக்கிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்திருந்தார்.

Secret Behind Thala Ajith starrer Viswasam's 125 crore collection

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை பேசிய இந்த படம் ரசிகரக்ளின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்ட நிறுவனமான கேஜேஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கோட்டப்பாடி ராஜேஷ் Behindwoods தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

நான் அடிப்படையில பேங்கர். சினிமா எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். குறிப்பாக எம்ஜிஆர் ரொம்ப பிடிக்கும்.

அதே மாதிரி தான் அஜித் சாரும். சிலர பார்க்காமே பிடிக்கும்ல. அவர பத்தி நல்ல விஷயங்களா கேள்வி பட்டு பிடிக்குமே. அதே மாதிரி தான் அஜித்தும்.  

விஸ்வாசம் படமும் பேட்ட படமும் ரிலீஸானது போட்டியல்ல. அது ஆரோக்கியமான விஷயம். அறம் படம் வெளியான போது, முதல் வாழ்த்து ரஜினியிடம் இருந்து தான் வந்தது.

இந்த படம் அஜித்தின் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்தது.  இந்த படத்துக்கு நான் தான விநியோகிஸ்தர். நான் தான் சொல்லனும். இந்த படம் ரூ.125 கோடி வசூலித்ததற்கு காரணம் அஜித்தின் ரசிகர்கள். அவர்களின் வெறித்தனமான அன்புதான் இச்சாதனைக்கு காரணம்.

ஒவ்வொருவரும் 10 முறை, 15 முறை பார்க்கிறார்கள். நண்பர்களுடன் தனியாகவும், பின்னர் குடும்பத்தை அழைத்து வந்தும் பார்க்கிறார்கள் என்றார்.

விஸ்வாசம் ரூ.125 கோடி வசூலுக்கு காரணம் இது தான் VIDEO