Petta USA All Banner

விஜய், நயன்தாராவின் ‘தளபதி 63’ படம் எப்படி இருக்கும்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் -நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் தளபதி 63 திரைப்படம் பக்கா மாஸ் ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THE GENRE OF VIJAY & NAYANTHARA'S THALAPATHY63 OFFICIALLY REVEALED

’தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி-விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் ‘தளபதி 63’. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் 20வது படமாக உருவாகவுள்ள ‘தளபதி 63’ திரைப்படம் மெகா பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஒட்டுமொத்த படக்குழு குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அட்லி-விஜய் வெற்றிக் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக ‘மெர்சல்’, ‘சர்கார்’ போன்ற சூப்பர்ஹிட் ஆல்பங்களை தொடர்ந்து விஜய்யுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளார்.

பக்கா மாஸ் ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக உருவாகவிருக்கும் இப்படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளது. முதன்முறையாக நடிகர் விஜய் இதுபோன்ற கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இதுவரை வெளியான விஜய் படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பூஜையுடன் ஷூட்டிங் பணிகளை தொடங்கியுள்ள ‘தளபதி 63’ படக்குழுவிற்கு பிஹைண்ட்வுட்ஸின் வாழ்த்துக்கள்.