Petta USA All Banner

பிக் பாஸ் ரைசா நடிக்கும் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கவிருக்கும் புதிய ரொமாண்டிக் படம் குறித்த அறிவிப்பு வெளியகியுள்ளது. இப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ரைசா நடிக்கவிருக்கிறார்.

Raiza Wilson will be paired opposite to GV Prakash in a Fantasy Comedy

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் யுவன் தயாரிப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ’ஆலிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

குறும்பட இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் முரட்டு சிங்கிளாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். பெங்களூரில் பணிபுரியும் ஜி.வி, தனது சொந்த ஊரான குன்னூருக்கு செல்லும் பயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.

’ஜோக்கர்’ பட நடிகர் குரு சோமசுந்தரம் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஷா ரா, ராமர், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் காமெடி நடிகர் செந்தில் நடிக்கிறார். ‘டிக் டிக் டிக்’ பட ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் ’தீரன்’ பட எடிட்டர் சிவா ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர். வரும் பிப்.1ம் தேதி இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் ஒரே ஷெடியூலாக 40 நாட்களில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.