கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்தில் பாட 9 கல்லூரி மாணவிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாய்ப்பளித்துள்ளார்.

Ilayaraja to introduce 9 College girls as singers in Vijay Antony's Tamizharasan

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை ராணி மேரி, எத்திராஜ் உள்ளிட்ட கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. இந்த கொண்டாட்டங்களில் கல்லூரி மாணவிகள் பலரும் பாடல்கள் பாடி இளையராஜாவை அசத்தினர்.

மாணவிகள் சிலர் தாங்கள் சினிமாவில் பாட முடியுமா என்ற வேண்டுகோளையும் இளையராஜாவிடம் முன் வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக சில மாணவிகளை அழைத்து தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இளையராஜா பாடவைத்துள்ளார். அவர்களில் 9 பேரை தேர்வு செய்ததுடன், விரைவில் திரைப்படத்தில் பாட வாய்ப்புத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதன்படி, எஸ்.என்.எஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா, அந்த 9 மாணவிகளையும் பாடகிகளாக அறிமுகப்படுத்தவுள்ளார்.